ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, அரிதினும் அரிதான நிகழ்வு ஒன்றை கேமராவில் படம் பிடித்துள்ளது. செடிகள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்வதை அவர்கள் கேமரா மூலம் பதிவு செய்துள்ளனர்.
மரம் செடி கொடிகள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ளும் என அறிவியல் கூறுகிறது. குறிப்பாக, காற்றில் வாசனைகளை வெளியேற்றி அருகில் இருக்கும் மற்ற செடிகளுக்கு ஆபத்தை உணர்த்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோ மூலம் ஜப்பான் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பான விரிவான தகவல்கள் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், பூச்சிகளால் பாதிக்கப்பட்ட செடி, அருகில் இருந்த ஆரோக்கியமான மற்றொரு செடிக்கு ஆபத்தை உணர்த்துவது படம் பிடிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு பெட்டிகளில் இருந்த செடிகளுக்கு இடையில் ஏர் பம்ப் ஒன்று பொருத்தப்பட்டு, காற்றில் செய்தி பரிமாற்றம் நிகழ்ந்தது கண்டறியப்பட்டுள்ளது. கால்சியத்தை வெளியேற்றுவதன் மூலம், செடிகள் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.