சரிவில் இருந்து மீண்டு, ஏற்றம் பெறும் பங்குச் சந்தை

January 24, 2024

நேற்று ஒரே நாளில் 1000 புள்ளிகளுக்கு மேல் இழந்த சென்செக்ஸ், இன்று சரிவிலிருந்து மீண்டு ஏற்றும் பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நாளில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 689.76 புள்ளிகள் உயர்ந்து 71060.31 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 215.16 புள்ளிகள் உயர்ந்து 21453.95 புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஹிண்டால்கோ, டாக்டர் ரெட்டீஸ், டாடா ஸ்டீல், ஹெச் சி எல் […]

நேற்று ஒரே நாளில் 1000 புள்ளிகளுக்கு மேல் இழந்த சென்செக்ஸ், இன்று சரிவிலிருந்து மீண்டு ஏற்றும் பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நாளில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 689.76 புள்ளிகள் உயர்ந்து 71060.31 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 215.16 புள்ளிகள் உயர்ந்து 21453.95 புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஹிண்டால்கோ, டாக்டர் ரெட்டீஸ், டாடா ஸ்டீல், ஹெச் சி எல் டெக், பவர் கிரிட், இண்டஸ் இண்ட் வங்கி, பி பி சி எல், ஹெச்டிஎப்சி வங்கி, என்டிபிசி, கோல் இந்தியா, ஐடிசி, ரிலையன்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், இன்ஃபோசிஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஆக்சிஸ் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், எச்டிஎப்சி லைஃப், டி சி எஸ், எல் டி ஐ மைண்ட் ட்ரீ போன்ற நிறுவனங்கள் இறக்கமடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu