பிரான்சில் அமேசான் நிறுவனத்துக்கு 35 மில்லியன் டாலர்கள் அபராதம்

January 25, 2024

பிரான்ஸ் நாட்டில் அமேசான் நிறுவனத்துக்கு 35 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சேமிப்பு கிடங்கில் பணி செய்யும் ஊழியர்களின் நடவடிக்கைகளை மிகவும் அதிகமாக கண்காணித்த குற்றத்திற்காக அந்நாட்டின் தனி உரிமை கண்காணிப்பு அமைப்பு இந்த அபராதத்தை விதித்துள்ளது. அமேசான் இணைய வர்த்தக நிறுவனத்துக்கு சொந்தமாக பல்வேறு சேமிப்பு கிடங்குகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நோக்கில், அவர்களது தனி உரிமைகளை மீறும் வகையிலான செயல்களில் அமேசான் ஈடுபடுவதாக […]

பிரான்ஸ் நாட்டில் அமேசான் நிறுவனத்துக்கு 35 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சேமிப்பு கிடங்கில் பணி செய்யும் ஊழியர்களின் நடவடிக்கைகளை மிகவும் அதிகமாக கண்காணித்த குற்றத்திற்காக அந்நாட்டின் தனி உரிமை கண்காணிப்பு அமைப்பு இந்த அபராதத்தை விதித்துள்ளது.

அமேசான் இணைய வர்த்தக நிறுவனத்துக்கு சொந்தமாக பல்வேறு சேமிப்பு கிடங்குகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நோக்கில், அவர்களது தனி உரிமைகளை மீறும் வகையிலான செயல்களில் அமேசான் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஸ்கேனர் கருவி மூலம் ஊழியர்களை கண்காணிப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி, ஊழியர்கள் எத்தனை வினாடிகளுக்குள் (பொதுவாக 1.25 வினாடிகள்) பார்கோடு ஸ்கேனிங் போன்றவற்றை செய்கிறார்கள் என துல்லியமாக கணக்கிடப்படுகிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் தனி உரிமை கொள்கைகளை மீறுவதாகும். இதன் காரணமாக, அமேசான் நிறுவனத்துக்கு பிரான்ஸ் அபராதம் விதித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu