நிலவின் மேற்பரப்பு சூழலை பூமியில் உருவாக்க ஐரோப்பிய விண்வெளி மையம் திட்டம்

January 25, 2024

நிலவின் மேற்பரப்பு போன்ற சூழலை பூமியில் உருவாக்க ஐரோப்பிய விண்வெளி மையம் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் நிலவுக்கு செல்லும் விண்வெளி வீரர்களை பயிற்றுவிப்பதற்கு இந்த சூழல் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த நிபுணர்கள், கிரீன்லாந்து பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து, நிலவில் உள்ளதை போன்ற அமைப்புடைய பாறைகளை அவர்கள் சேகரிக்க உள்ளனர். இதற்காக, கிரீன்லாந்தில் உள்ள சுரங்க நிறுவனத்துடன் இணைந்து அவர்கள் பணியாற்றி வருகின்றனர். எதிர்காலத்தில் பல்வேறு நிலவு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ள […]

நிலவின் மேற்பரப்பு போன்ற சூழலை பூமியில் உருவாக்க ஐரோப்பிய விண்வெளி மையம் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் நிலவுக்கு செல்லும் விண்வெளி வீரர்களை பயிற்றுவிப்பதற்கு இந்த சூழல் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த நிபுணர்கள், கிரீன்லாந்து பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து, நிலவில் உள்ளதை போன்ற அமைப்புடைய பாறைகளை அவர்கள் சேகரிக்க உள்ளனர். இதற்காக, கிரீன்லாந்தில் உள்ள சுரங்க நிறுவனத்துடன் இணைந்து அவர்கள் பணியாற்றி வருகின்றனர். எதிர்காலத்தில் பல்வேறு நிலவு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், நிலவைப் போன்ற சூழல் அமைப்பு பூமியிலேயே உருவாக்கப்படுவது பல்வேறு ஆராய்ச்சிகளை எளிமைப்படுத்தும் என ஐரோப்பிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu