சர்வதேச அளவில், ஊழல் குறைப்பில் எந்தெந்த நாடுகள் சிறந்து விளங்குகின்றன என்ற பட்டியல் வெளியாகி உள்ளது. ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியா 93 ஆம் இடத்தில் உள்ளது.
சர்வதேச அளவில் மொத்தம் 180 நாடுகள் ஊழல் குறியீட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதில், ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகமாக கொண்டு, முதலிடத்தில் டென்மார்க் உள்ளது. தொடர்ந்து 6வது வருடமாக டென்மார்க் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. டென்மார்க்கை தொடர்ந்து, பின்லாந்து, நியூசிலாந்து, நார்வே, சிங்கப்பூர், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, லக்சம்பேர்க் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில், அமெரிக்கா 69 ஆம் இடத்திலும், சீனா 76 ஆம் இடத்திலும், இந்தியா 93 ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 133 ஆம் இடத்திலும் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, 2022 ல் 85 ஆம் இடத்தில் இருந்து, 2023 ல் 93 ஆம் இடத்துக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.














