மெக்சிகோ - துப்பாக்கிச் சூட்டில் மேயர் உட்பட 18 பேர் பலி

October 6, 2022

நேற்றைய தினம், தென்மேற்கு மெக்சிகோவின் சான் மிகுவல் டோடோலாபானில் உள்ள குடியிருப்பு ஒன்றில், அடையாளம் தெரியாத குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். எதிர்பாராத நேரத்தில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் அந்தப் பகுதி மேயர் கான்ராடோ மெண்டோசா, அவர் தந்தை, முன்னாள் மேயர் ஜுவான் மெண்டோசா உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினர், இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து கேள்வி பட்டு, சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி […]

நேற்றைய தினம், தென்மேற்கு மெக்சிகோவின் சான் மிகுவல் டோடோலாபானில் உள்ள குடியிருப்பு ஒன்றில், அடையாளம் தெரியாத குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். எதிர்பாராத நேரத்தில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் அந்தப் பகுதி மேயர் கான்ராடோ மெண்டோசா, அவர் தந்தை, முன்னாள் மேயர் ஜுவான் மெண்டோசா உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவல்துறையினர், இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து கேள்வி பட்டு, சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்நிலையில், இது தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒரு காணொளி வெளியாகி உள்ளது. அதில் `லாஸ் டெக்விலிரோஸ்' என்ற அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்ளது. எனினும், அரசு அதிகாரிகள் இந்த தாக்குதல் குறித்து உறுதியான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.

இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மெக்சிகோ நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu