டிஎன்பிஎல் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று காலை தொடங்கியது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று காலை தொடங்கியது. இதில் அபிஷேக் தன்வரை சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 12.2 லட்சம் கொடுத்து ஏலம் எடுத்தது. மேலும் ஏற்கனவே அதில் விளையாடிய ஜி.பெரியசாமியை 8.8 லட்சம் கொடுத்து மீண்டும் அணியில் இணைத்துள்ளது. மேலும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை சேர்ந்த ஆர்.விவேக் ரூபாய் 11 லட்சத்திற்கும், இதே அணியை சேர்ந்த எஸ். ஹரிஷ் குமார் ரூபாய் 15.4 லட்சத்திற்கும், திருச்சி கிராண்ட் சோலாஸ் அணியினை சேர்ந்த ஆர்.சஞ்சய் யாதவ் ரூபாய் 22 லட்சத்திற்கும், திருப்பூர் தமிழன்ஸ் அணியை சேர்ந்த நடராஜன் ரூபாய் 11.25 லட்சத்திற்கும், இதே அணியை சேர்ந்த சாய் கிஷோர் ரூபாய் 22 லட்சத்திற்கும் மேலும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை சேர்ந்த சந்தீப் வாரியார் ரூபாய். 10.5 லட்சத்திற்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.














