2 கிலோ, 5 கிலோ காஸ் சிலிண்டர் விற்பனை: அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்

October 7, 2022

கூட்டுறவு சங்கம் மூலம் நடைபாதை மற்றும் சிறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் 2 கிலோ, 5 கிலோ இன்டேன் நிறுவன காஸ் சிலிண்டர் விற்பனையை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலை கடைகளில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ மற்றும் 5 கிலோ இண்டேன் நிறுவன சிறிய ரக காஸ் சிலிண்டர்களை கூட்டுறவு சிறப்பங்காடிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விற்பனை துவக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது முதல்முறையாக நியாயவிலை கடைகள் மூலமாக விற்பனை […]

கூட்டுறவு சங்கம் மூலம் நடைபாதை மற்றும் சிறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் 2 கிலோ, 5 கிலோ இன்டேன் நிறுவன காஸ் சிலிண்டர் விற்பனையை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலை கடைகளில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ மற்றும் 5 கிலோ இண்டேன் நிறுவன சிறிய ரக காஸ் சிலிண்டர்களை கூட்டுறவு சிறப்பங்காடிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விற்பனை துவக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது முதல்முறையாக நியாயவிலை கடைகள் மூலமாக விற்பனை செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் புலம் பெயர் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலா செல்வோர் பயனடைவர்.

இதனை கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் கூட்டுறவு துறையின் மூலமாக, சாலையோர வியாபாரிகள், வணிகர்கள் மற்றும் பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என அத்தனை பகுதி மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக 2 கிலோ கேஸ் வழங்கும் திட்டத்தையும், 5 கிலோ வரை கேஸ் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். இதனை பெறுவதற்கு எவ்வித முகவரி சான்றும் சமர்ப்பிக்க தேவையில்லை. ஏதேனும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையினை மட்டும் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

மேலும், 2 கிலோ காஸ் சிலிண்டர் விலை ரூ.961.50 புதிய இணைப்பிற்கும், சிலிண்டர்களில் காஸ் நிரப்புவதற்கு ரூ.253.50ம், மற்றும் 5 கிலோ காஸ் சிலிண்டர் விலை ரூ.1,528 புதிய இணைப்பிற்கும், காஸ் நிரப்ப ரூ.584 என்று இந்தியன் ஆயில் நிறுவனம் விலை நிர்ணயம் செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu