அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நிகழாண்டில் இதுவரை 6 இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழந்த இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஒரே மாதத்திற்குள் நிகழ்ந்துள்ள இந்த சம்பவங்களால் அமெரிக்காவில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட படிப்பு பயின்று வந்த சமீர் காமத் என்ற இந்திய மாணவர் அண்மையில் உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது மரணம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், உடற்கூறு ஆய்வு செய்வதற்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.