உலகிலேயே தற்கொலை விகிதம் அதிகமாக உள்ள ஆப்ரிக்கா - ஐக்கிய நாடுகள் சபை

October 7, 2022

மற்ற நாடுகளை விட ஆப்ரிக்காவில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை விகிதம் அதிகமாக உள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலகில் அதிக தற்கொலை விகிதங்களைக் கொண்ட 10 நாடுகளில் ஆறு நாடுகள் ஆப்பிரிக்காவில் உள்ளன. மேலும் ஆப்பிரிக்க கண்டத்தின் தற்கொலை விகிதம் மற்ற கண்டங்களை விட ஐந்தில் ஒரு பங்கு அதிகமாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அவலங்கள் பெரும்பாலும் மறைக்கப்படுகிறதாக ஐக்கிய நாடுகள் சபை ௯றியது. அதாவது […]

மற்ற நாடுகளை விட ஆப்ரிக்காவில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை விகிதம் அதிகமாக உள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உலகில் அதிக தற்கொலை விகிதங்களைக் கொண்ட 10 நாடுகளில் ஆறு நாடுகள் ஆப்பிரிக்காவில் உள்ளன. மேலும் ஆப்பிரிக்க கண்டத்தின் தற்கொலை விகிதம் மற்ற கண்டங்களை விட ஐந்தில் ஒரு பங்கு அதிகமாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த அவலங்கள் பெரும்பாலும் மறைக்கப்படுகிறதாக ஐக்கிய நாடுகள் சபை ௯றியது. அதாவது ஆப்பிரிக்க கண்டத்தில் ஆண்டுக்கு 100,000 க்கு 11 பேர் தற்கொலையால் இறக்கின்றனர். இது உலகளாவிய சராசரி 100,000 பேருக்கு ஒன்பது என்பதை விட அதிகம் என்று ஒ௫ செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது. அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல தினத்தை முன்னிட்டு இந்தப் பிரச்சனை குறித்த விழிப்புணர்வுக்கான வேண்டுகோளை ஏஜென்சி தொடங்கியுள்ளது. மேலும் தற்கொலை ஒரு பெரிய சுகாதார பிரச்சனை. இ௫ப்பினும் தேசிய சுகாதாரத் திட்டங்களில் தற்கொலைத் தடுப்புதிட்டத்திற்கு அரிதாகவே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று ஏஜன்சி இயக்குநர் மட்ஷிடிசோ மொய்ட்டி கூறினார். நாட்டில் நிதி பற்றாக்குறையைப் போல இதுவும் ஒரு முக்கிய பிரச்சனை என்று WHO கூறியது. அதாவது ஆப்பிரிக்காவில் சராசரியாக 500,000 குடிமக்களுக்கு ஒரு மனநல மருத்துவர் மட்டுமே இருக்கிறார். இது WHO இன் பரிந்துரையை விட 100 மடங்கு குறைவான விகிதம் ஆகும். அதேபோல் ஆபிரிக்காவில் மனநலத்துக்கான செலவு ஒரு நப௫க்கு 50 சென்ட்களுக்கு கீழ் உள்ளது. இது ஐ.நா பரிந்துரைப்பதைவிட கால் பங்கிற்கும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu