உக்ரைன் ரஷ்யா போர் தீவிரமாக நடந்து வரும் சூழலில், உக்ரைன் நாட்டின் ஆயுதப்படை தலைமை தளபதி வலேரி ஜலுன்ஸ்யி நீக்கப்பட்டுள்ளார்.
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் வலேரி இடையே கடந்த சில காலமாக மோதல் நிலவியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வலேரி நீக்கப்பட்டுள்ளார். ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டுக்குள் வேகமாக ஊடுருவிய போது, ரஷ்யாவை எதிர்த்து சிறப்பாக செயல்பட்டதில் வலேரி தலைமையிலான ஆயுதப்படை கவனம் பெற்றது. இந்த நிலையில், போரில் புதிய யுக்திகளை வகுக்கும் நோக்கில் அவர் நீக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். புதிதாக தலைமை தளபதியாக பொறுப்பேற்க உள்ளவர் குறித்த தகவல் வெளியாகவில்லை. அவரது தலைமையில் உக்ரைன் நாட்டின் போர் வியூகம் பெரியளவில் மாற்றப்படும் என கருதப்படுகிறது.














