ஐரோப்பாவில் பணியாற்றும் கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு வழங்க உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதற்காக, 224 கோடி ரூபாய் அதாவது 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப துறையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. எனவே, தனது பணியாளர்களை திறன் ரீதியாக மேம்படுத்த, கூகுள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த முறை, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பயிற்சி மையங்கள் அமைப்பது மற்றும் புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிப்பது போன்றவற்றில் கூகுள் களமிறங்கி உள்ளது. இந்த பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.














