பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அமீரகம் செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அமீரகம் செல்வதற்காக புறப்பட்டு உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அபுதாபிக்கு சென்று அங்கு இன்று மாலை நடைபெற உள்ள பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரை சந்திக்க உள்ளா.ர் அதனை தொடர்ந்து அந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் 700 நடன கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டு ரசிக்க உள்ளார். பின்னர் மேடையில் பிரதமர் மோடி மக்களிடையே உரையாற்ற உள்ளார். பின்னர் நாளை மதியம் 12:30 மணியளவில் துபாயில் மூன்றாவது நாளாக நடைபெற உள்ள உலக அரசு உச்சி மாநாட்டில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். அதனை தொடர்ந்து பி.ஏபி. எஸ் அமைப்பு சார்பில் துபாய் - அபுதாபி ஷேக் ஜாயித் பகுதியில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கோவில் மற்றும் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். பின்னர் அன்று இரவு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து அபுதாபியிலிருந்து இந்தியா புறப்படுகிறார்.