ஜூனியர் உலக கோப்பை போட்டி 15 ஆவது தொடரின் இறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதியதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
ஜூனியர் உலக கோப்பை போட்டி 15 ஆவது தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது அதனை அடுத்து ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 174 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் 79 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது