டெல்லியில் இரண்டாவது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்

February 14, 2024

அரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் மாநில விவசாயிகள் டெல்லியில் நேற்று முதல் முற்றுகைப் போராட்டம் நடத்த முயற்சித்து வருகின்றனர். உத்திரபிரதேசம், பஞ்சாப் அரியானா மாவட்ட விவசாய வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்திருந்தனர். இதில் கடந்த எட்டாம் தேதி விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை அடுத்து நேற்று பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் லாரிகள், டிராக்டர்கள் மற்றும் வாகனங்களில் […]

அரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் மாநில விவசாயிகள் டெல்லியில் நேற்று முதல் முற்றுகைப் போராட்டம் நடத்த முயற்சித்து வருகின்றனர்.

உத்திரபிரதேசம், பஞ்சாப் அரியானா மாவட்ட விவசாய வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்திருந்தனர். இதில் கடந்த எட்டாம் தேதி விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை அடுத்து நேற்று பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் லாரிகள், டிராக்டர்கள் மற்றும் வாகனங்களில் தேவையான உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு டெல்லி நோக்கி புறப்பட்டனர். இதனால் அரியானாவில் இருந்து டெல்லிக்கு செல்லும் சாலைகள் சீல் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் டெல்லி எல்லையில் ஆறு அடுக்கு தடுப்புச் சுவர்கள் போடப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் மீறி விவசாயிகள் டெல்லி நுழைய முயற்சி செய்ததை அடுத்து அவர்கள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. மேலும் பல விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தின. தற்போது இன்று இரண்டாவது நாளாக மீண்டும் வெளிநோக்கிய போராட்டத்தை திட்டமிட்டபடி தொடங்குவதாக டெல்லி விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக டெல்லியில் 144 தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu