செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி

February 15, 2024

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 20வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இவர் மீதான குற்றப்பத்திரிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. ஜனவரி 22ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதாக தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அமலாக்க துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை தொடங்க தடை விதிக்க வேண்டும் என சென்னை முதன்மை […]

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 20வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இவர் மீதான குற்றப்பத்திரிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. ஜனவரி 22ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதாக தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அமலாக்க துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை தொடங்க தடை விதிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இவ்வழக்கு மீதான விசாரணை முடிவடைந்து நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். அத்தோடு குற்றச்சாட்டு பதிவிற்காக நாளை இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இவரது நீதிமன்ற காவல் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இருபதாவது முறையாக செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu