சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம், வேகமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. கடந்த 10 மாதங்களுக்கு முன் பதிவான ஓபன் ஏஐ நிறுவன மதிப்பு, தற்போது மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஓபன் ஏஐ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 80 பில்லியன் டாலர்களை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உலக அளவில், பல்வேறு புத்தாக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. ஆனால், புத்தாக்க நிறுவனமாக தொடங்கப்பட்டு குறுகிய காலத்தில் மிக உயர்ந்த இடத்தை ஓபன் ஏஐ நிறுவனம் அடைந்துள்ளது. சீனாவின் டிக் டாக் தளத்தை உருவாக்கிய பைட் டான்ஸ் நிறுவனம் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் மதிப்பை விட சற்று குறைவாகவே ஓபன் ஏ ஐ மதிப்பிடப்படுகிறது. மிக முக்கிய ஒப்பந்தங்கள் ஓபன் ஏஐ நிறுவனத்துக்கு சாதகமாக கையெழுதாகி உள்ளன. அத்துடன், சோறா என்ற புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஓபன் ஏஐ வெளியிட்டுள்ளது. இவற்றின் விளைவாக ஓபன் ஏஐ மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.