வெங்காய ஏற்றுமதி தடை மார்ச் 31 வரை நீட்டிப்பு

February 20, 2024

கடந்த டிசம்பர் மாதத்தில், இந்தியாவில் வெங்காய ஏற்றுமதி தடை செய்யப்பட்டது. இந்த தடை ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மார்ச் 31 வரை நீடிக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், வெங்காய ஏற்றுமதி மீதான தடையை அரசு நீக்கி உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங் வெங்காய ஏற்றுமதி மீதான தடை ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தொடர்வதாக அறிவித்துள்ளார். உள்ளூர் சந்தையில் வெங்காய விலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில், ஏற்றுமதி தடை […]

கடந்த டிசம்பர் மாதத்தில், இந்தியாவில் வெங்காய ஏற்றுமதி தடை செய்யப்பட்டது. இந்த தடை ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மார்ச் 31 வரை நீடிக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், வெங்காய ஏற்றுமதி மீதான தடையை அரசு நீக்கி உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங் வெங்காய ஏற்றுமதி மீதான தடை ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தொடர்வதாக அறிவித்துள்ளார். உள்ளூர் சந்தையில் வெங்காய விலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில், ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். எனினும், நெருங்கிய நட்பு நாடுகளுக்கு மட்டும், ஒப்புதலின் அடிப்படையில் வெங்காய ஏற்றுமதி மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu