எஸ் வங்கி பங்குகள் தொடர் சரிவு

February 21, 2024

தொடர்ந்து 4வது வர்த்தக நாளாக எஸ் வங்கி பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. அதன்படி, ஒரே வாரத்தில் தனது ஒரு வருட உச்ச பங்கு மதிப்பை விட 22% அளவில் எஸ் வங்கி பங்கு மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று, எஸ் வங்கி பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 4% வரை சரிந்துள்ளது. அத்துடன், தொடர்ந்து 4வது நாளாக சரிவை சந்தித்து வருகிறது. இன்றைய வர்த்தக நாளின் போது, எஸ் வங்கியின் ஒரு பங்கு மதிப்பு 25 ருபாய் அளவில் […]

தொடர்ந்து 4வது வர்த்தக நாளாக எஸ் வங்கி பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. அதன்படி, ஒரே வாரத்தில் தனது ஒரு வருட உச்ச பங்கு மதிப்பை விட 22% அளவில் எஸ் வங்கி பங்கு மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.

இன்று, எஸ் வங்கி பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 4% வரை சரிந்துள்ளது. அத்துடன், தொடர்ந்து 4வது நாளாக சரிவை சந்தித்து வருகிறது. இன்றைய வர்த்தக நாளின் போது, எஸ் வங்கியின் ஒரு பங்கு மதிப்பு 25 ருபாய் அளவில் இருந்தது. இதுவே, கடந்த பிப்ரவரி 9ம் தேதி 32 ரூபாய் ஆக, ஒரு வருட உச்சத்தை பதிவு செய்திருந்தது. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி, கிட்டதட்ட 1057 கோடி ரூபாய் மதிப்பிலான எஸ் வங்கி பங்குகளை கார்ல் (Carlyle) குழுமம் விற்றது. தற்போதைய நிலையில் கார்ல் குழுமத்திடம் 5.08% எஸ் பங்குகள் மட்டுமே உள்ளன. எஸ் வங்கி பங்குகள் வீழ்ச்சி அடைந்ததற்கு இதுவே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu