ஆப்பிளின் முக்கிய பிரிவுக்கு இந்திய வம்சாவளி தலைவர் தலைமை ஏற்பு

February 22, 2024

ஆப்பிள் நிறுவனத்தின் ஒலியியல் பிரிவு தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ருசிர் டேவ் பதவியேற்றுள்ளார் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் ஒலியியல் பிரிவு தலைவராக கேரி கீவ்ஸ் பதவியில் இருந்தார். இவர் தற்போது மாற்றப்பட்டு இந்தியா வம்சாவளியை சேர்ந்த ருசிர் டேவ் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார் என்று ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேக் கணினிகள், ஏர்பாட் உட்பட ஆப்பிளின் தயாரிப்புகளில் பொருத்தப்படும் ஒலி சார்ந்த வன்பொருளுக்கு இந்த ஒலியியல் பிரிவு பொறுப்பு வகிக்கும். […]

ஆப்பிள் நிறுவனத்தின் ஒலியியல் பிரிவு தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ருசிர் டேவ் பதவியேற்றுள்ளார் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் ஒலியியல் பிரிவு தலைவராக கேரி கீவ்ஸ் பதவியில் இருந்தார். இவர் தற்போது மாற்றப்பட்டு இந்தியா வம்சாவளியை சேர்ந்த ருசிர் டேவ் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார் என்று ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேக் கணினிகள், ஏர்பாட் உட்பட ஆப்பிளின் தயாரிப்புகளில் பொருத்தப்படும் ஒலி சார்ந்த வன்பொருளுக்கு இந்த ஒலியியல் பிரிவு பொறுப்பு வகிக்கும்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் குஜராத்தை சேர்ந்தவர். அகமதாபாத்தில் 1998ல் பொறியியல் படிப்பை நிறைவு செய்தார். 2009 முதல் ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஒளியியல் பொறியாளராக இவர் பணியில் சேர்ந்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்து 2021 மார்ச்சில் மூத்த இயக்குனராக பதவி ஏற்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu