உ.பி யில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
உத்திர பிரதேசத்தில் காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெற்றது. 60,000 காலி பணியிடங்களுக்காக நடைபெற்ற தேர்வில் சுமார் 50 லட்சம் பேர் தேர்வு எழுதினார். இந்நிலையில் தேர்வுக்கு முன்னரே இதன் வினாத்தாள் கசிந்து சமூக வலைத்தளங்களில் பரவியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் உத்திரபிரதேச அரசு இந்த தேர்வை ரத்து செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளது.














