மோட்டோரோலா நிறுவனத்தின் பெண்டபில் கைபேசி அறிமுகம்

February 27, 2024

பார்சிலோனாவில், சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் புதிய சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், மோட்டோரோலா நிறுவனம் சார்பில், பெண்டபில் கைபேசி (Bendable) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது உலக அளவில் அதிக கவனம் பெற்றுள்ளது. மோட்டோரோலா நிறுவனத்தின் பெண்டபில் போனை வெவ்வேறு வடிவத்திற்கு மாற்றி பயன்படுத்த முடியும். அதிநவீன வளையும் தன்மை கொண்ட டிஸ்ப்ளே மூலம் இது உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, கைக்கடிகாரத்தை போன்று கட்டிக் கொள்ளும் […]

பார்சிலோனாவில், சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் புதிய சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், மோட்டோரோலா நிறுவனம் சார்பில், பெண்டபில் கைபேசி (Bendable) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது உலக அளவில் அதிக கவனம் பெற்றுள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் பெண்டபில் போனை வெவ்வேறு வடிவத்திற்கு மாற்றி பயன்படுத்த முடியும். அதிநவீன வளையும் தன்மை கொண்ட டிஸ்ப்ளே மூலம் இது உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, கைக்கடிகாரத்தை போன்று கட்டிக் கொள்ளும் வகையில் இது உருவாக்கப்படுகிறது. இந்த கைப்பேசி எதிர்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், கான்செப்ட் வடிவில் இது வெளியாகி உள்ளது. பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இது வெளிவருவதற்கு சில காலங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu