ரஞ்சிக் கோப்பை மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்

ரஞ்சிக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்திற்கான மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் மிடில் ஆடர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் மற்றும் பிசிசிஐ க்கும் இடையே கருத்து வேறுபாடு என தகவல் வெளியானது. பொதுவாக வீரர்களின் உடலில் ஏற்படும் சிறு சிறு காயங்கள் மூலம் இந்திய அணியில் இருந்து விலகி மீண்டும் அணிக்கு திரும்ப தயாராகும் போது ரஞ்சிக்கோப்பையில் விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தும். அதேபோல் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து […]

ரஞ்சிக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்திற்கான மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் மிடில் ஆடர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் மற்றும் பிசிசிஐ க்கும் இடையே கருத்து வேறுபாடு என தகவல் வெளியானது. பொதுவாக வீரர்களின் உடலில் ஏற்படும் சிறு சிறு காயங்கள் மூலம் இந்திய அணியில் இருந்து விலகி மீண்டும் அணிக்கு திரும்ப தயாராகும் போது ரஞ்சிக்கோப்பையில் விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தும். அதேபோல் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து ரன்னெடுக்க முடியாமல் தவிக்கும் போது உள்ளூர் போட்டிகளில் விளையாடவும் வலியுறுத்துவதுண்டு. ஆனால் பிரபல நட்சத்திர வீரர்கள் பெரும்பாலும் ரஞ்சி கோப்பையில் போட்டியிடுவதில்லை. இவர்கள் நேரடியாக இந்திய அணிக்கு தகுதி பெறுவார்கள். அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் ரஞ்சிக் கோப்பையில் விளையாட பிசிசிஐ பரிந்துரைத்தது. ஆனால் அவர் அதில் விளையாட ஆர்வம் காட்டவில்லை என தகவல் வெளியாகியது. இந்நிலையில் ரஞ்சி கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்திற்கான மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அரை இறுதி போட்டி ஆனது வரும் மார்ச் இரண்டாம் தேதி தொடங்குகிறது. இதில் மும்பை தமிழ்நாடு அணிகள் மோதுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu