இனி எக்காரணம் கொண்டும் ஓட்டுனர் உரிமம் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது என தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
ஓட்டுநர் உரிமங்கள் இனி விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும். எக்காரணம் கொண்டும் ஓட்டுனர் உரிமம் விண்ணப்பதாரர்களுக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் வாகன எண், சாரதி மென்பொருள் அலைபேசி எண், முகவரி தவறாக இருந்தாலும் விரைவு அஞ்சல் அனுப்பப்பட மாட்டாது. மேலும் ஓட்டுனர் உரிமம் டெலிவரி செய்யப்படாமல் திரும்ப பெறப்பட்டாலும் நேரில் ஒப்படைக்கப்பட மாட்டாது. விண்ணப்பதாரிடம் இருந்து உரிய ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட சுய முகவரி இட்ட தபால் பெறப்பட்டு அதில் தான் அனுப்பப்படும் என போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி முகவரியை குறிப்பிட்டிருந்தால் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.