பயனர் வசதிகளை மேம்படுத்தும் வகையில், பல்வேறு புதிய அம்சங்களை வாட்ஸ் அப் கொண்டு வருகிறது. அந்த வகையில், புதிதாக தேதி வாரியாக குறுஞ்செய்திகளை தேடும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், இது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் செயலியில் தேதி வாரியாக குறுஞ்செய்திகளை எவ்வாறு தேட வேண்டும் என்ற விவரங்களை வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது. அதன்படி, சாட் விண்டோவின் பெயர் பகுதியில் கிளிக் செய்தால், தேடல் ஆப்ஷன் கொடுக்கப்படும். அதில் தேதி அடிப்படையில் குறுஞ்செய்திகளை தேடுவதற்கான அம்சம் இடம்பெற்றுள்ளது. இந்த அம்சம் மிகப்பெரிய அளவில் பயனர்களுக்கு துணை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.