மோடியின் தேர்தல் பிரச்சார பேச்சு எட்டு மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் நவீன தொழில்நுட்பத்தை எப்பொழுதும் புகுத்தி வருகிறது. அதில் கடந்த 2014 மற்றும் 2019ஆம் வருடங்களில் சமூக வலைதள பக்கங்களை பாரதிய ஜனதா அளவிற்கு வேறு எந்த கட்சியும் பயன்படுத்தவில்லை. தற்போது பாரதிய ஜனதா கட்சி ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தேர்தல் பிரச்சாரத்தை பயன்படுத்த ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி பிரதமர் மோடி நாடு முழுவதும் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரங்களை ஆங்கிலம் அல்லது இந்தியில் பிரச்சாரம் செய்தால் அதை தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், பெங்காலி,பஞ்சாபி, மராத்தி, ஒடியா ஆகிய எட்டு மொழிகளில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.














