போர் ஏற்பாடுகளை தீவிரப்படுத்த கிம் ஜாங் அன் உத்தரவு

March 8, 2024

போர் திறனை அதிகரிக்க வடகொரிய இராணுவத்திற்கு கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். வடகொரியா அவ்வப்போது ஏவுகணை மற்றும் ஆயுத சோதனைகள் நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதனை வடகொரியா தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக பார்க்கிறது. தங்களை சீண்டும் நாடுகள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள் என்று வடகொரிய தலைவர் கிம் ஜான் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருந்தபோதிலும், இந்த நாடுகள் கூட்டுப் போர் […]

போர் திறனை அதிகரிக்க வடகொரிய இராணுவத்திற்கு கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

வடகொரியா அவ்வப்போது ஏவுகணை மற்றும் ஆயுத சோதனைகள் நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதனை வடகொரியா தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக பார்க்கிறது. தங்களை சீண்டும் நாடுகள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள் என்று வடகொரிய தலைவர் கிம் ஜான் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருந்தபோதிலும், இந்த நாடுகள் கூட்டுப் போர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், வடகொரிய தலைவர் ராணுவ தளத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் பேசுகையில், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அழிக்கும் போர் திறனை வட கொரிய ராணுவம் அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu