இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீரர் தோல்வியடைந்தார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கனடாவின் மிலியோஸ் ரவ்னிக் உடன் இந்திய வீரர் ஸ்மித் நாகல் மோதினார். இதில் 6-3, 6-3 என்ற செட்டில் மிலியோஸ், நாகலை வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதனால் இந்திய வீரர் ஸ்மித் நாகல் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.