தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம், தமிழ்நாடு பசுமை மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் என தமிழ்நாடு மின்சார வாரியம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 24ஆம் தேதி தமிழக அரசு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்திற்கு என தனித்தனி நிறுவனமாக பிரிக்க அனுமதி வழங்கியது. இதனை அடுத்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை தனித்தனியாக பிரித்த அரசாணையை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம், தமிழ்நாடு பசுமை மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் என்ன மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 4320 மெகா வாட் திறன் கொண்ட மேட்டூர் மற்றும் வடசென்னை அனல் மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்படும் உடன்குடி அனல் நிலையம் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்திற்கு மாற்றப்படுகிறது. அதைப்போன்று 2321 மெகா வாட் திறன் கொண்ட குந்தா மற்றும் கொல்லிமலை நீர்மின் நிலையங்கள் மற்றும் அரசிற்கு சொந்தமான 41 மெகா வாட் திறன் கொண்ட காற்றாலை நிறுவனங்கள் தமிழ்நாடு பசுமை கழகத்திற்கு மாற்றப்படுகிறது.














