ஐபிஎம் நிறுவனத்தில் 7 நிமிட சந்திப்பில் பணி நீக்கம் அறிவிப்பு

March 13, 2024

ஐபிஎம் நிறுவனம் பணி நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிலும், வெறும் 7 நிமிடங்களுக்கு நடைபெற்ற சந்திப்புக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎம் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை பேர் நீக்கப்படுகின்றனர் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி ஜொனாதன் அதசேக், ஏழு நிமிட சந்திப்புக்கு பிறகு இந்த […]

ஐபிஎம் நிறுவனம் பணி நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிலும், வெறும் 7 நிமிடங்களுக்கு நடைபெற்ற சந்திப்புக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎம் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை பேர் நீக்கப்படுகின்றனர் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி ஜொனாதன் அதசேக், ஏழு நிமிட சந்திப்புக்கு பிறகு இந்த முடிவை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, ஐபிஎம் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா, புதிய பணி அமர்வுகளை நிறுத்தி வைப்பதாக கூறியிருந்தார். அவர் கூறியபடி, செயற்கை நுண்ணறிவு வரவு காரணமாக இந்த பணி நீக்கங்கள் இருக்கலாம் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu