ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கு தொடர்பாக 400 ஏஜெண்டுகளின் 86 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 7000 ஏஜெண்டுகளை கண்டறிந்து அதில் ஏமாற்றும் நோக்குடன் பொதுமக்களை முதலீடு செய்ய வைத்த 500 ஏஜென்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 500 ஏஜென்ட்களில் 400 பேருக்கு சம்மன் அனுப்பி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கமிஷனாக பெற்று சேர்த்த 86 சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். மேலும் நூறுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன வழக்கில் ரூ.2,438 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 196 கோடி வங்கி கணக்கு மற்றும் 103 அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு முடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.














