ஐபிஎல் 2024 சீசன் தொடக்கத்தில் முதல் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் 2024 சீசனில் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது. ஆட்டத்தின் இறுதியில் 173 ரன்கள் எடுத்தது. பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. அதில் 18.4 ஓவரில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.