சிகிச்சைக்காக காத்திருந்ததில் 250 க்கும் மேற்பட்டோர் மரணம் - இங்கிலாந்தில் அதிர்ச்சி சம்பவம்

April 1, 2024

இங்கிலாந்து நாட்டில், அவசர கால சிகிச்சை தாமதமாவதால் அதிக உயிரிழப்புகள் நேர்வதாக சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அவசரகால மருத்துவத்திற்கான ராயல் கல்லூரி, இங்கிலாந்தில் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் காத்திருப்பதால் நேரும் மரணங்களை பற்றி ஆய்வு செய்தது. அதன் முடிவுகளை அந்நாட்டின் தேசிய சுகாதார சேவை துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காத காரணத்தால், ஒவ்வொரு வாரமும் சராசரியாக 268 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023 ஆம் […]

இங்கிலாந்து நாட்டில், அவசர கால சிகிச்சை தாமதமாவதால் அதிக உயிரிழப்புகள் நேர்வதாக சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அவசரகால மருத்துவத்திற்கான ராயல் கல்லூரி, இங்கிலாந்தில் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் காத்திருப்பதால் நேரும் மரணங்களை பற்றி ஆய்வு செய்தது. அதன் முடிவுகளை அந்நாட்டின் தேசிய சுகாதார சேவை துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காத காரணத்தால், ஒவ்வொரு வாரமும் சராசரியாக 268 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக, 15 லட்சம் நோயாளிகள் உரிய நேர சிகிச்சையின்றி உயிரிழந்துள்ளனர். இதனை வைத்து பார்க்கும்போது, கடந்த பிப்ரவரியில், 12 மணி நேரத்திற்கும் மேலாக சிகிச்சை இன்றி காத்திருந்தவர்களின் எண்ணிக்கை 45000 என தெரியவந்துள்ளது. இந்த செய்தி உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu