ஃப்ளோரிடா வீட்டில் விழுந்த விண்வெளி குப்பை

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பிரிந்த பேட்டரி பகுதி ஒன்று ஃப்ளோரிடாவில் உள்ள வீட்டின் மீது விழுந்துள்ளது. இது விண்வெளி குப்பை பற்றிய சச்சரவுகளை மீண்டும் எழுப்பி உள்ளது. புளோரிடா வீட்டில் விழுந்த சர்வதேச விண்வெளி மையத்தின் பாகம், வீட்டின் கூரை மற்றும் தரையை சேதப்படுத்தி உள்ளது. மிகுந்த சத்தத்துடன் அதி வேகமாக வீட்டின் மீது விழுந்ததாக உரிமையாளர் தெரிவித்துள்ளார். நல்வாய்ப்பாக, வீட்டில் உள்ளவர்களுக்கு பாதிப்புகள் நேரவில்லை எனக் கூறியுள்ளார். முன்னதாக, விண்வெளிக் குப்பை என கருதப்படும் […]

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பிரிந்த பேட்டரி பகுதி ஒன்று ஃப்ளோரிடாவில் உள்ள வீட்டின் மீது விழுந்துள்ளது. இது விண்வெளி குப்பை பற்றிய சச்சரவுகளை மீண்டும் எழுப்பி உள்ளது.

புளோரிடா வீட்டில் விழுந்த சர்வதேச விண்வெளி மையத்தின் பாகம், வீட்டின் கூரை மற்றும் தரையை சேதப்படுத்தி உள்ளது. மிகுந்த சத்தத்துடன் அதி வேகமாக வீட்டின் மீது விழுந்ததாக உரிமையாளர் தெரிவித்துள்ளார். நல்வாய்ப்பாக, வீட்டில் உள்ளவர்களுக்கு பாதிப்புகள் நேரவில்லை எனக் கூறியுள்ளார். முன்னதாக, விண்வெளிக் குப்பை என கருதப்படும் இந்த பொருள் மெக்சிகோ வளைகுடா பகுதியில் பூமிக்குள் நுழைந்தது US space command ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து 5 நிமிடங்கள் கழித்து வீட்டின் மீது விழுந்துள்ளது. கடந்த மார்ச் 8ம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து நாசா விசாரணை செய்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu