ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பிடனை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். “இந்த பயணத்தின் மூலம், ஜப்பான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு வலுவடைகிறது. அத்துடன், இதுவரை எந்த தேசமும் சென்றடையாத உயரத்தை எட்டுகிறது” என்று கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் புமியோ கிஷிடா வருகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், இரவு விருந்தில், டிம் குக், ஹிலாரி கிளிண்டன், பில் கிளிண்டன், டி நெரோ, யோசோபி போன்ற முக்கிய பிரமுகர்கள் அவரை சந்திக்க அழைக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.














