வருகிற 22ஆம் தேதி எலான் மஸ்க் பிரதமரை சந்திப்பதற்காக இந்தியா வருகை தர உள்ளார்.
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் தள உரிமையாளரும் டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ ஆகவும் உள்ள எலான் மஸ்க் வருகிற 22ஆம் தேதிக்கு இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இது குறித்த செய்தி ராய்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவர் இந்தியா வருகையின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். மேலும் இந்தியாவில் புதிய முதலீடுகள் மற்றும் புதிய தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து விவாதிக்க உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














