தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2024 மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களாகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்கள் அனைவருக்கும் அன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கூறியிருந்தார். தற்போது தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது. விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மிகுந்து புகார்கள் இருப்பின் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














