இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதை தொடர்ந்து அந்நாட்டில் டெல் அவிவ் நகருக்கு செல்லும் விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் டில்லிக்கும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கும் இடையே வாரத்திற்கு நான்கு முறை நேரடி விமான சேவை செய்து வருகிறது. இந்நிலையில், ஹமாஸ் - இஸ்ரேல் போர் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக இந்த வழித்தடத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இதனை கடந்த மாதம் மூன்றாம் தேதி மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது. தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை தொடங்கியதில் இருந்து மீண்டும் இந்த விமான சேவையை தற்காலிகமாக ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. இஸ்ரேல் போர் தற்போது பரவி வருவதே இதற்கு காரணம். வரும் நாட்களில் அந்த பிராந்தியத்தில் போர் பரவக்கூடும் என்ற அஞ்சப்படுகிறது.