பால்வீதி மண்டலத்தின் மிகப்பெரிய கருந்துளை - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

நமது பூமி இருக்கும் பால்வீதி மண்டலத்தில் உள்ள மிகப்பெரிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனை விட 33 மடங்கு அதிக நிரை கொண்ட இந்த கருந்துளை Gaia BH3 என்று அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் விஞ்ஞானிகள் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். பூமியிலிருந்து 2000 ஒளி ஆண்டுகள் தொலைவில் Acquila என்று அழைக்கப்படும் விண்மீன் கூட்டத்தில் இந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “இவ்வளவு நாட்களாக அருகில் இருக்கும் கருந்துளை கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது மிகப்பெரிய புதிராக இருந்தது. இதனை […]

நமது பூமி இருக்கும் பால்வீதி மண்டலத்தில் உள்ள மிகப்பெரிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனை விட 33 மடங்கு அதிக நிரை கொண்ட இந்த கருந்துளை Gaia BH3 என்று அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் விஞ்ஞானிகள் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

பூமியிலிருந்து 2000 ஒளி ஆண்டுகள் தொலைவில் Acquila என்று அழைக்கப்படும் விண்மீன் கூட்டத்தில் இந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “இவ்வளவு நாட்களாக அருகில் இருக்கும் கருந்துளை கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது மிகப்பெரிய புதிராக இருந்தது. இதனை கண்டுபிடித்தது வாழ்நாள் சாதனை” என விஞ்ஞானி Panuzzo தெரிவித்துள்ளார். மேலும், “இந்த கருந்துளை உயிர்ப்புடன் இல்லை. எனவே, எந்த விதமான எக்ஸ்ரே கதிர்களையும் வெளியிடவில்லை. இதன் காரணமாக, இதை கண்டுபிடிப்பதற்கு சவாலாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu