கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் கேண்டிடேட் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 12-வது சுற்றில் டி. குகேஸ்வெற்றி அடைந்துள்ளார்.
உலக சாம்பியனுடன் மோதும் வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்யும் கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் நடைபெற்று வருகிறது.14 சுற்றுக்களை கொண்டுள்ள இந்த போட்டி தொடரின் 12வது சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஐந்து பேர் பங்கேற்றுள்ளனர். அதில் சென்னையைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டீ. முகேஷ் அஜர்பைஜான் வீரர் நிஜாத் அப்சோவை 12-வது சுற்றில் எதிர்கொண்டார். இதில் 57வது நகர்தலில் இருக்கும் போது குகேஷ் வெற்றி பெற்றார். இது அவரது நான்காவது வெற்றியாகும். அப்சோவை இரண்டாவது முறையாக வீழ்த்தியுள்ளார்.