ஹிந்தி தூர்தர்ஷன் செய்தி சேனல் லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாறியுள்ளது.
மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி இந்தி செய்தி சேனல் ஆன தூர்தர்ஷன் லோகோவினை சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள், ஊடக வல்லுனர்களிடையே கடும் அதிருப்தியும், கண்டனங்களும் எழுந்துள்ளன. இது குறித்து கூறுகையில், மத்திய அரசு நிறுவனங்கள் முழுவதும் காவிமயமாக்கல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. மேலும் மாநிலங்களவை, மக்களவை ஊழியர்களில் பாதி பேர் காவி சீருடைகளை அணிந்து வருகின்றனர். ஜி 20 லோகோவிலும் காவி நேரம் காணப்படுகிறது. இது சர்வாதிகார ஆட்சியின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில் ஜி-20 மாநாட்டிற்கு முன்பு ஆங்கில செய்தி சேனல் லோகோவை அதே நிரத்தில் புதுப்பித்தோம். ஒரே குழுவில் இருந்து வரும் ஒரே செய்தி சேனல்கள் ஒரே தோற்றத்தை பின்பற்றுகின்றன என கூறினார்.