ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சஞ்சய் மஷ்ரூவாலா செயல்பட்டு வந்தார். நிறுவனத்தின் இரண்டு இயக்குனர்களில் இவர் ஒருவராக இருந்தார். இந்த நிலையில், இவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ இந்த தகவலை தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தோற்றுனரான திருபாய் அம்பானி காலத்தில் இருந்தே சஞ்சய் மஷ்ரூவாளா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களில் அவரது பங்களிப்பு இருந்துள்ளது. இந்த நிலையில், வரும் ஜூன் 9 முதல் ரிலையன்ஸ் நிறுவனத்தை விட்டு அவர் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நிறுவனத்துக்கு ஆற்றிய சேவைகளுக்கு அறிக்கையில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரிலையன்ஸ் ஜியோவின் மற்றொரு நிர்வாக இயக்குநர் பங்கஜ் மோகன் பவார் தொடர்ந்து பணியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.