போராட்டத்தில் ஈடுபட்டதால் மேலும் 20 பேர் பணி நீக்கம் - கூகுள் அதிரடி

April 23, 2024

கடந்த வாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கூகுள் நிறுவன ஊழியர்கள் 28 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து தற்போது மேலும் 20 பேரை இதே காரணங்களுக்காக பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அரசாங்கத்துடன் கூகுள் நிறுவனம் கிளவுட் கம்ப்யூட்டிங் திட்டம் ஒன்றில் பணியாற்றுகிறது. கிட்டத்தட்ட 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த திட்டத்திற்கு எதிராக கூகுள் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் களமிறங்கி உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கூகுள் பணிநீக்கம் செய்துள்ளது. இதனால் […]

கடந்த வாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கூகுள் நிறுவன ஊழியர்கள் 28 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து தற்போது மேலும் 20 பேரை இதே காரணங்களுக்காக பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் அரசாங்கத்துடன் கூகுள் நிறுவனம் கிளவுட் கம்ப்யூட்டிங் திட்டம் ஒன்றில் பணியாற்றுகிறது. கிட்டத்தட்ட 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த திட்டத்திற்கு எதிராக கூகுள் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் களமிறங்கி உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கூகுள் பணிநீக்கம் செய்துள்ளது. இதனால் மற்ற ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக பேசிய கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் வெளிப்படை கலாச்சாரத்துக்கு எதிராக போராட்டம் உள்ளதாக விமர்சித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu