‘ஆல்வேஸ் ஆன்’ ஐஓடி தீர்வை வெளியிட்டது ஏர்டெல்

October 15, 2022

ஏர்டெல் தனது ‘ஆல்வேஸ் ஆன்’ ஐஓடி தீர்வை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தீர்வானது இரட்டை சுயவிவர eSim ஐ உள்ளடக்கியது. அதாவது eSIM இல் உள்ள வெவ்வேறு மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களிடமிருந்து (MNOக்கள்) ஒரு IoT சாதனத்தை எப்போதும் மொபைல் நெட்வொர்க்குடன் இணைக்க இது அனுமதிக்கிறது. ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இந்த ஆல்வேஸ் ஆன், ஆனது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் (MoRTH) செயல்படுத்தப்பட்ட இந்திய வாகன ஆராய்ச்சி சங்கத்தின் (ARAI) AIS-140 விதிமுறைகளுக்கு உட்படுகிறது. […]

ஏர்டெல் தனது ‘ஆல்வேஸ் ஆன்’ ஐஓடி தீர்வை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தீர்வானது இரட்டை சுயவிவர eSim ஐ உள்ளடக்கியது.

அதாவது eSIM இல் உள்ள வெவ்வேறு மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களிடமிருந்து (MNOக்கள்) ஒரு IoT சாதனத்தை எப்போதும் மொபைல் நெட்வொர்க்குடன் இணைக்க இது அனுமதிக்கிறது.

ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இந்த ஆல்வேஸ் ஆன், ஆனது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் (MoRTH) செயல்படுத்தப்பட்ட இந்திய வாகன ஆராய்ச்சி சங்கத்தின் (ARAI) AIS-140 விதிமுறைகளுக்கு உட்படுகிறது. மேலும் இது ஜிபிஎஸ் கண்காணிப்பு திறன்கள் தொடர்பான கட்டாயத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இ௫ப்பதால், அனைத்து பயணிகளை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்துகள், கடற்படைகள் மற்றும் பிற பொதுப் போக்குவரத்து வாகனங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசு சமீபத்தில் அபாயகரமான பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அனைத்து பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் மற்றும் டாக்சிகள் AIS-140 தரநிலைகளுக்கு இணங்க டிராக்கரை நிறுவுவதை கட்டாயமாக்கியது. எனவே ஆல்வேஸ் ஆன் ஐஓடி தீர்வு மூலம் அடுத்த சில ஆண்டுகளில் இந்தப் பிரிவில் ஏர்டெல் முன்னணியில் இ௫க்கும் என எதிர்பார்க்கிறது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட ஏர்டெல் பிசினஸின் இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அஜய் சிட்காரா, AIS140 தீர்வு ஏற்கனவே Lumax ITuran, Loconav மற்றும் e-Trans போன்ற தொழில்துறையில் உள்ள சில முன்னணி நிறுவனங்களால் சோதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் இணைப்புத் தீர்வுகளை வழங்குவதில் நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu