நாகை - இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை

April 29, 2024

வருகிற மே 13ம் தேதி முதல் நாகை - இலங்கை இடையே காங்கிரசின் துறைக்கு சிவகங்கை கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையானது நாகை துறைமுகத்திலிருந்து 60 நாட்டிக்கல் மைல்களில் உள்ள இலங்கை காங்கேசன் துறையை சுமார் மூன்றரை மணி நேரத்தில் சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வந்தது. இந்த […]

வருகிற மே 13ம் தேதி முதல் நாகை - இலங்கை இடையே காங்கிரசின் துறைக்கு சிவகங்கை கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையானது நாகை துறைமுகத்திலிருந்து 60 நாட்டிக்கல் மைல்களில் உள்ள இலங்கை காங்கேசன் துறையை சுமார் மூன்றரை மணி நேரத்தில் சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மழை காரணமாக இந்த கப்பல் சேவையானது கடந்த 2023 அக்டோபர் 22 ஆம் தேதி நிறுத்தப்பட்டது. தற்போது நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட சிவகங்கை என்ற கப்பல் அடுத்த மாதம் 13ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக பத்தாம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு சிவகங்கை கப்பல் வரவுள்ளது. இந்த கப்பல் ஆனது 133 இருக்கைகளும் மேல் தளத்தில் 205 இருக்கைகளும் உள்ளவாறு பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்ய கீழ்தளத்தில் உள்ள மக்களுக்கு ஜிஎஸ்டி வரிகள் உடன் ரூபாய் ஐந்தாயிரம், மேல் தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் பயணிக்க உள்ள பயணிகளுக்கு ஜி. எஸ்.டி உடன் ரூபாய் 7000 வசூல் செய்யப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu