மஹிந்திரா வாகன நிறுவனம் புதிய எஸ்யூவி வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விளைவாக இன்றைய வர்த்தக நாளில் மஹிந்திரா நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரு வருட உச்சத்தை பதிவு செய்துள்ளது. தேசிய பங்குச் சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2158 ரூபாயாக இருந்தது.
XUV 3XO என்ற பெயரில் புதிய எஸ்யூவி ரக வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. சுமார் 7.49 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த வாகனம், வரும் மே 15 முதல் ஆன்லைன் மற்றும் டீலர்கள் தளங்களில் முன்பதிவுக்கு வெளியாகிறது. முன்பதிவு செய்தவர்களுக்கு மே 26 முதல் வாகனங்கள் வழங்கப்படும். பல்வேறு நவீன அம்சங்களை உள்ளடக்கி சிறந்த விலை அம்சத்தில் வெளியாகியுள்ள இந்த வாகனம், பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக, இன்றைய வர்த்தக நாளில் மஹிந்திரா நிறுவன பங்குகள் 5% அளவுக்கு உயர்ந்தன.