ஹீரோ மோட்டோகார்ப் காலாண்டு முடிவுகள் வெளியீடு - பங்குகள் 6% உயர்வு

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 18% உயர்வை பதிவு செய்துள்ளது. மார்ச் மாத இறுதியில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிகர லாபம் 1016 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் தனிப்பட்ட செயல்பாட்டு வருவாய் 14% உயர்ந்து 9519 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. விற்பனை அடிப்படையில், கடந்த காலாண்டில் 13.92 லட்சம் எண்ணிக்கையில் […]

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 18% உயர்வை பதிவு செய்துள்ளது. மார்ச் மாத இறுதியில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிகர லாபம் 1016 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் தனிப்பட்ட செயல்பாட்டு வருவாய் 14% உயர்ந்து 9519 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

விற்பனை அடிப்படையில், கடந்த காலாண்டில் 13.92 லட்சம் எண்ணிக்கையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் இது 12.7 லட்சமாக இருந்தது. மேலும், கடந்த 2024-ம் நிதி ஆண்டில் ஒட்டுமொத்தமாக 56.21 லட்சம் ஹீரோ மோட்டோகார்ப் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காலாண்டு முடிவுகள் மிகவும் சாதகமாக அமைந்துள்ளதால், இன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 6% அளவுக்கு ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu