10 நிமிடத்தில் தங்கம் - ஸ்விக்கி ஜொமாட்டோ அட்சய திருதியை அறிவிப்பு

May 10, 2024

ஸ்விக்கி, ஜொமாட்டோ, ஜெப்டோ போன்ற துரித வர்த்தக தளங்களில், மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்ற பொருட்களை பொதுமக்கள் வாங்கி வருகின்றனர். இந்த சூழலில், அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு, இன்று துரித வர்த்தக பாணியில் தங்கத்தை வீட்டுக்கு கொண்டு சேர்ப்பதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் வீடு தேடி தங்கம் கொண்டு சேர்க்கப்படும். ஜொமாட்டோ நிறுவனத்தின் கிளை நிறுவனமான பிளின்கிட் தளத்தில் தங்கத்துடன் சேர்த்து பூஜை பொருட்களையும் இணைத்து, அட்சய திருதியைக்கான […]

ஸ்விக்கி, ஜொமாட்டோ, ஜெப்டோ போன்ற துரித வர்த்தக தளங்களில், மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்ற பொருட்களை பொதுமக்கள் வாங்கி வருகின்றனர். இந்த சூழலில், அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு, இன்று துரித வர்த்தக பாணியில் தங்கத்தை வீட்டுக்கு கொண்டு சேர்ப்பதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் வீடு தேடி தங்கம் கொண்டு சேர்க்கப்படும்.

ஜொமாட்டோ நிறுவனத்தின் கிளை நிறுவனமான பிளின்கிட் தளத்தில் தங்கத்துடன் சேர்த்து பூஜை பொருட்களையும் இணைத்து, அட்சய திருதியைக்கான பிரத்தியேகப் பெட்டகம் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் உடன் கூட்டணியில் இணைந்து, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை விற்பனை செய்கிறது. டாடா குழுமத்தை சேர்ந்த பிக் பாஸ்கட் நிறுவனம், தனிஷ்க் உடன் கூட்டாக இணைந்து தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் மற்றும் கட்டிகளை விற்பனை செய்கிறது. ஜெப்டோ தளத்தில் ஒரு கிராம் மற்றும் அரை கிராம் அளவில் 24 காரட் தங்க நாணயம் மற்றும் 10 கிராம் வெள்ளி நாணயம் ஆகியவை விற்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu