ஐசிசி டி20 உலக கோப்பை 2024 தொடருக்கான ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடருக்கு 20 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இதில் பங்கேற்க உள்ள அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதில் தற்போது இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த அணியின் கேப்டன் ஆக ஹசாரங்கா நியமிக்கப்பட்டுள்ளார். சரித் அசலங்கா( துணை கேப்டன்), குசல் மெண்டிஸ், பதும் நிஷங்கா, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, தனஞ்செயா டி சில்வா, மஹீஸ் தீக்ஷன, துனித்,வெல்லலாகே, துஷ்மந்த சமீர, நுவன் துஷார, மதீஷா பதிரானா, மற்றும் தில்ஷன் மதுஷங்க.
ரிஸர்வ் வீரர்கள்: அஷித ஃபெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக ராஜ,ஜனித் லியானகே ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்














