நேற்று வெயில் காரணமாக கட்டுமான பணிகள் காலை 10 மணி முதல் 4 மணி வரை மேற்கொள்ளக்கூடாது என கட்டுமான நிறுவனங்களுக்கு சென்னை தொழிலாக பாதுகாப்பு சுகாதார இயக்குனர் அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் அதிக வெப்பநிலை காரணமாக தொழிலாளர்கள் உடல் நிலை பாதிக்கப்படுவதை தொடர்ந்து இதனை தடுக்கும் பொருட்டு திறந்தவெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான பணிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெப்பம் குறைந்து வழக்கம் போல கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது